நாணற்காடன் மனித மனங்களை வாசிக்கத் தெரிந்தவர். குழந்தைகளின் உளப்பாங்கில் அவர்களுக்கான வெளியை உருவாக்கி விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்.
மிக இயல்பாக மாமா கதை சொல்கிறார். பிள்ளைகள் ம்ம், அட, அடடா, அப்புறம்.. இப்படிக் கதை கேட்கிறார்கள். முப்பத்தொன்பது கதைகள். முப்பத்தொன்பது பொருள்கள்.
கதைகள் எந்த இடத்திலும் பாடம் போதிப்பதை, அறிவு புகட்டுவதைச் செய்யவில்லை. ஆனால் இதற்குள் அறிவியல் இருக்கிறது; கணக்கு இருக்கிறது; சமூகவியல் இருக்கிறது; அறவியல் இருக்கிறது. மிகமிக நுட்பமாக இவற்றைப் பொதித்து இக்கதைகளை வேறு தளத்திற்குக் கொண்டு செல்கிறார் நாணற்காடன். இந்நூல் தமிழ்க் குழந்தை இலக்கிய வெளியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கும்.
-முனைவர் இரா.காமராசு
Be the first to rate this book.