முனைவர் சு. ராஜகோபால் சிறந்த, மூத்த கல்வெட்டாய்வாளர். தமிழ்க் கல்வெட்டுகளைப் பல ஆண்டுகள் ஆராய்ந்து அவற்றைப் பற்றி எழுதி வந்துள்ளார். மேலும் பல மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தும் பயிற்றுவித்தும் அனுபவம் பெற்றுள்ளார். பல கல்வெட்டு நூல்களைப் பதிப்பித்துள்ளார். கல்வெட்டுச் செய்திகளை வைத்துப் பல ஆழமான கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். தான் எழுதி வெளியிட்ட பல கட்டுரைகளில் சிலவற்றை மட்டும் தொகுத்து இந்த நூலை ஆக்கியுள்ளார். கல்வெட்டுத் தரவுகளை முதன்மையாகக் கொண்டு இக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அதே நேரத்தில் இலக்கியத் தரவுகளையும் ஒப்பீட்டுக்காக உரிய முறையில் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
-எ. சுப்பராயலு
Be the first to rate this book.