ஒருநாளின் 24 மணி நேரத்தில் இளையராஜாவின் பாட்டுகள் ஒலிக்காத ஒரு விநாடிகூட இல்லை. இரவோ பகலோ பனியோ வெயிலோ, எந்தப் பொழுதாக இருந்தாலும் மகிழ்ச்சி, சோகம் என எப்படிப்பட்ட உணர்வு என்றாலும் இளையராஜாவின் பாடல்களோடு வாழும் தமிழர்கள் உலகெங்கிலும் நிறைந்திருக்கிறார்கள்.
பாடல் மூலமாகக் கதை சொல்வதும் கதை கேட்பதும் தமிழர்களின் கலை மரபு. அந்த மரபை இன்றைக்கும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் இளையராஜாவின் பாடல்கள் நம் சொந்த வாழ்வில் நிகழ்ந்த பல கதைகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. அப்படியான ராஜாவின் பாடல்களோடு பிள்னிப் பிணைந்த வாழ்வின் மிகச் சில கதைகளை இயல்பான, உணர்வு பொங்கும் மொழியில் எழுதியிருக்கிறார் முருகன் மந்திரம். ராஜாவின் பாடல்கள் அன்றாட வாழ்வில் எவ்வாறு ஊடாடு கின்றன என்பதற்கு இது ஒரு சோற்றுப் பதம். இச்சிறு நூலை வாசித்து முடிக்கும்போது, உங்கள் வாழ்வின் நிகழ்வுகளோடு பிணைந்திருக்கும் ராஜாவின் ராகங்கள் உங்கள் நினைவில் வந்து இசைக்கும்.
முருகன் மந்திரம் திரைப்பாடலாசிரியராகவும் இருப்பதால் எளிய, இயல்பான மொழியில் நம் காதோரம் வந்து தாலாட்டும் மெலடியான பாடலைப்போல் மென்மையாக எழுதியிருக்கிறார்.
- இந்து தமிழ் திசை
75க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் மற்றும் 5 படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறார்.பத்திரிகையாளர், விமர்சகர் மற்றும் பாடலாசியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இணை இயக்குநர் என திரைப்பயணம் தொடர்கிறது.சமூகத்தின் மீதான அக்கறையோடும் மனித இனத்திற்கு பகுத்தறிவூட்டும் நோக்கத்தோடும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர்.10 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையிலும் 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாத்துறையிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.
Be the first to rate this book.