தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது தஞ்சையில் மோட்டார் ரீவைண்டிங் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். காமிக்ஸில் தொடங்கிய இவரது வாசிப்பு வாண்டு மாமா, சாண்டில்யன், கல்கி, தமிழ்வாணன், சுஜாதா. ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ரா.கி.ரெங்கராஜன், ஜெயகாந்தன், டால்ஸ்டாய், காந்தி, தஸ்தேய்வஸ்கி, எஸ்.ரா.ஜெயமோகன் என நீண்டு சமகால எழுத்தாளர்களைப் படிப்பது வரை தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். இவரது படைப்புகள் வாசகசாலை, சொல்வனம், மயிர், சிறுகதைகள்.காம், நடுகல், அகழ் ஆகிய இதழ்களில் வெளியாகி வருகின்றன.
Be the first to rate this book.