எழுபதுகளில் தோன்றிய வானம்பாடி இதழின் வாயிலாக, தொழில்முறையில் பேராசிரியர்களாக இருந்த கவிஞர்கள் பலரும் தமது மனவோட்டங்களைப் புதுக்கவிதையில் பதியலாயினர். மீரா என்று அறியப்பட்ட மீ.ராஜேந்திரன் பல நிலைகளில் முந்தைய நிலையை மீறும் பண்புடையவர். ஊசிகள் எனும் இத்தொகுப்புக் கவிதைகளில் சமூகத்தின் பொதுப்புத்தி, பத்திரிகைகளின் பாசாங்குகள், அரசியல்வாதிகளின் அலம்பல்கள், அரசு ஊழியர்களின் அர்த்தமற்ற நிறைவின்மை எனப் பலவற்றில் குத்திக்காட்டும் ஊசியாகவும், வாசகர்களுக்குள் மருந்தாக உட்செலுத்தும் ஊசியாகவும் பல கவிதைகளைப் படைத்துள்ளார். ஊசிகள் நவீன அங்கதம்; கவிதைகளுக்கான ஓர் அத்தியாவசியமாகும்.
--இரா.மோகனவசந்தன்
Be the first to rate this book.