தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் எழுதிய முன்னோடி சு. தியடோர் பாஸ்கரன்; தமிழில் சுற்றுச்சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல்களையும் உருவாக்கியதில் அவரது பங்களிப்பு அளப்பரியது. கலை வரலாறு, தொல்லியல் சார்ந்து அவர் எழுதியவை முன்னுதாரணம் இல்லாதவை.
பாஸ்கரனின் எழுத்துகளில் வெளிப்படும் அசலான அனுபவங்களும் சுயமான பார்வைகளும் பெரும் நம்பகத்தன்மையை உருவாக்குவது மட்டுமல்ல, வாசிப்பவரின் இதயத்தை நெருங்கித் தொடுகின்றன. பன்முக அர்த்தங்களை உள்ளடக்கி, புனைவின் சாயல்களைக் கொண்ட அவரது மொழிநடை நம் வாசிப்பை மேலான தளத்துக்கு உயர்த்துகிறது.
சினிமா, சுற்றுச்சூழல், கலை வரலாறு, தொல்லியல் என எடுத்துக்கொண்ட எந்தத் தலைப்பிலும் ஆரோக்கியமான கேள்விகளின் மூலம் ஆழமான உரையாடலுக்கு இட்டுச் செல்லும் பாஸ்கரனின் கட்டுரைகள், நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான ஆழமான பார்வைகளைத் தருகின்றன.
பாஸ்கரனின் பரந்த எழுத்துலகிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பு இளையோருக்கும் புதியோருக்கும் பல வாசல்களைத் திறக்கும்.
Be the first to rate this book.