துணைக் கண்காணிப்பாளராகத் தனது காவல்துறைப் பணியைத் தொடங்கிய துக்கையாண்டி, காக்கிச்சட்டைக்குள்ளும் கருணை உள்ளம் உண்டு என்பதைத் தனது செயல்களால் நிரூபித்தவர். வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் வால்டர் தேவாரத்துடன் துணை நின்று பல நக்சல் தீவிரவாதிகளுக்கு நல்வழி காட்டியவர். அவர்களையே காவல் துறைப் பணியில் அமர்த்தி அவர்களது வாழ்வில் வளம் கூட்டியவர்.
இலங்கைத் தமிழர் பிரச்னையைக் கையாளுவதற்கு தமிழக அரசுக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும் பலவிதங்களில் உதவி செய்து, முதல்வர் எம்ஜிஆர், அவரது மறைவுக்குப் பின் ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் போன்றோரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றவர். மாநிலக் குற்றப்புலனாய்வுத் துறையிலும், வாழல் ஒழிப்புத் துறையிலும் பல ஆண்டுகள் பணிசெய்து முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகியோர் மீது பதியப்பட்ட வழக்குகளை விசாரணை செய்தவர். கூடுதல் காவல் துறைத் தலைவர் பதவிக்கு உயர்ந்து 2012இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
Be the first to rate this book.