காதல் ஓர் அழுத்தமான உணர்ச்சி. அதைக் கடந்துசெல்ல உதவுகிற யோகம்தான் கவிதை. காதல் நிலையை ஜென் நிலையாகப் பரிணமிக்கச் செய்யவே, கவிதை எழுதிப்பார்ப்பது. காதல் சில வேளை மோனமாகவும் சிலவேளை பித்தாகவும் இருக்கிறது. மோனம் தொடக்கம் கனிகிறபோது அடைவது பித்து நிலை. மோனம் காதல் நிரம்பிய ஞானநிலை. மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே' என்பான் பாரதி. மணிகண்டன் கவிதைகளில் மோனநிலை, பித்துநிலை இரண்டும் தெரிகிறது. 'காற்று வந்து மோதியது/ கை வளைவி பேசியது' என்பதெல்லாம் பித்து நிலை. காதல் கொண்டவர்களுக்கு, விலாப்புறத்தில் கண்ணுக்குத் தெரியாத சிறகு முளைத்திருக்கிறது. இவர்களுக்கு சந்திராயன், ஆதித்யா செயற்கைகோள்கள் தேவையில்லை. கண்ணுக்குத் தெரியாத சிறகு போதும். அந்த நம்பிக்கையில்தான் 'சந்திர மண்டலப் பெருவெளி நமக்கு' என்கிறார் கவிஞர். மணிகண்டன் பிறந்தது தமிழ்நாட்டில் வேலை செய்வது அமெரிக்காவில், வாழ்வது ஊதாப்பூ தேசத்தில். நீங்கள் இண்டிகோ தேசத்தில் வசிப்பவராக இருக்கலாம். உங்களுக்காகவும் இந்தொகுப்பில் ஒரு கவிதையை மணிகண்டன் எழுதியிருக்கக் கூடும்.
-கரிகாலன்.
Be the first to rate this book.