இந்தக் கதைகள் நிச்சயம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. இன்னுமொரு விடயத்துக்காகவும் முக்கியத்துவம் மிக்கவை. பூர்வகுடி மக்களான படகர்களின் வாழ்க்கையை விபரிக்கும் புனைகதைகள் என்பதால் அவை முக்கியத்துவம் மிக்கவை. மானுடவியல் படிப்பவர்களுக்கும் பயன் மிக்கவையாக விளங்கும் கதைகள் இவை.
-வ.ந.கிரிதரன் (எழுத்தாளர், பதிவுகள் மின்னிதழின் ஆசிரியர்,களபர்)
முனைவர் கோ.சுனில்ஜோகி நீலகிரி மாவட்டம் பொரங்காடு சீமெ ஒரசோலை ஊரினைச் சார்ந்தவர். இவர் கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நீலகிரி படகர்கள் குறித்த முதல் இனவரைவியல் புதினமாகத் திகழும் இவரின் மாதி எனும் நூலைப் பரிசல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, படகர்கள் குறித்த முதல் சிறுகதை தொகுப்பாகத் திகழும் இந்த ஓணி எனும் நூல் மலர் புக்ஸ் வெளியீடாக வந்துள்ளது. படகர்களின் மரபு மருத்துவம், புழங்குபொருட்கள் குறித்து முனைவர் பட்டம் பெற்ற இவர் 60 மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், 200 மேற்பட்ட கவிதைகள் போன்றவற்றைப் பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியிட்டுள்ளார்.
Be the first to rate this book.