நம் குழந்தைகளுக்கு. பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு இதுதான் சரியான சினிமா என்று சினிமா ரசனைக் கல்வியை இங்கே யாரும் தருவதே இல்லை. இதைத்தான் என் அன்பு ஆசான் பாலுமகேந்திரா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் முன்மொழிந்து, மிகத் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். பள்ளிகளில் ஓவியம், விளையாட்டு போன்ற கலைகளுக்குப் பாடங்கள் இருப்பது போல, நம் உடலிலும் நாடி நரம்புகளிலும் கலந்திருக்கும் சினிமாவுக்கும் எது சிறந்த சினிமா என்று சொல்லித் தரும் ரசனைக் கல்வி வேண்டும் என்பதுதான் அவருடைய மிக முக்கியமான கோரிக்கையாக இருந்தது. உலக சினிமா ரசனையை எவ்வாறு நமது மாணவச் செல்வங்களுக்குக் கொண்டு செல்லலாம் என்ற வகையில் இந்தச் சிறிய முயற்சி அவர் வைத்த ஆரம்பப் புள்ளியில் உண்டான கோலம் இது. அவர் ஏற்றிவைத்த அந்தச் சுடரை, இன்று நான் வழிமொழிவதில் என் அகம் மகிழ்கிறது.
-சீனு ராமசாமி
Be the first to rate this book.