களவாட வந்தவனை ஒரு சுன்னி உபகாரம் செய் என்று கேட்பது. படமெடுத்தாடும் நாகத்தைப் பார்த்து மாணிக்கம் கொடு என்று கேட்பது போலிருக்கிறதா? என் நிலைமை அப்படிப் பட்டது. அதனால்தான், யாரைக் கண்டால் பயத்தால் கூக்குரலிட வேண்டுமோ, அவனைக் கண்டு உதவி கேட்கிறேன். கொஞ்ச நேரம் என் காதலனாக இரு... "தாயே! கும்பிடுகிறேன். நீ வனதேவதையோ, மோகினியோ, என்னை ஒன்றும் செய்துவிடாதே. நான் தாய்க்கு ஒரே மகன்... இனி நான் சத்யமாகத் திருடுவதில்லை." ஐயோ! ஐயோ! முட்டாளே! நான் தேவதையுமல்ல. பிசாசுமல்ல. உன்னிடம் உதவி கேட்கும் ஒரு அபாக்யவதி. கொஞ்ச நேரம், ஒரு மணி நேரம் என்னைத் தாயே, பேயே என்று கூப்பிடாமல், கண்ணே! மணியே! என்று கூப்பிடு. அஞ்சாதே கொஞ்சிப் பேசு.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.