தமிழகம் ஒரு கலைக்கோயில்; பல்வகைக் கலைகள் செழித்த கவினார் பண்ணை; விண்ணை முட்டும் வியன்மிகு கோபுரங்கள், நன்னெறிப்படுத்தும் வண்ண ஓவியங்கள், சிந்தை மகிழ்விக்கும் இன்னிசை, இன்னபிற கலைகளின் தாயகம்.
தமிழினம் நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புடையது; நாகரிக நலம் சிறந்தது; பல்வகைக் கலைகளை வளர்த்துப் பண்பாடுற்றது; அவர்தம் கலைச் செல்வங்கள் எல்லாம் புதை பொருள்களாக உள்ளன. அவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்தினால் தமிழினத்தின் பெருமை தனிச் சிறப்பெய்தும், அம்முயற்சியின் விளைவே இந்நூல்,
இந்திய விடுதலைக்குப் பின் ஒவ்வொரினத்தவரும் தத்தம் பண்பாட்டையும் பழமைச் சிறப்பையும் அறிந்து போற்றுவதில் பேரவாக் கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் தமிழ் இலக்கியப் பரப்பும் பெருமையும் காட்டும் நூல்கள் பல வெளியிட்டுப் பாராட்டுப் பெற்ற நாங்கள், கலைகள் பற்றிய நூல்களையும் வெளியிட விரும்பினோம். அத்துறை வல்லுநராகிய ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களை அணுகினோம். அவர்கள் மிகச் சிறந்த முறையில் தம் நுண்மான் நுழைபுலத்தால் இவ்வரிய ஆய்வு நூலைச் சீரிய முறையில் ஆக்கித் தந்தார்கள். அவர்களுக்கு எம் நன்றி.
Be the first to rate this book.