இந்த நூல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடக்க வரலாற்றோடு அறிமுகமாகிறது. பிறகு தொல்-ஐரோப்பிய மொழிகளின் தோற்றம் முதல் தொல்-செருமானிய மொழிகளின் வளர்ச்சி வரை விரிகிறது. அதைத் தொடர்ந்து தொல்-நோர்சு மொழிகள் உருவாகி, அதிலிருந்து இன்று நோர்வே. சுவீடன். டென்மார்க் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழிகள் கிளைத்த வரலாறு விளக்கமாகச் சொல்லப்படுகிறது. ஒரு குழந்தையின் பார்வையில் உலக மொழிகளை ஆய்வுசெய்து வெளியாகும் முதல் நூல் இதுவே. புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த நூலாசிரியர், தமிழையும் சிறப்பாகக் கற்று, இப்படியொரு நூலை எழுதியிருக்கிறார். இந்த 12 வயது சிறுவனின் முதல் தமிழ் நூல் இதன் மூலமாக சிறப்பும் முக்கியத்துவமும் பெறுகிறது.
நூலாசிரியர் கதிர்நிலவன் 2013இல் நோர்வே நாட்டில் பிறந்தவர். 2018 முதல் சுவீடன் நாட்டின் அரசுப் பள்ளியில் சுவீடுசு மொழியில் தொடக்கநிலைக் கல்வியினைப் பெற்றதோடு அரசுப் பள்ளிகளில் தாய்மொழி கற்கும் அங்குள்ள வாய்ப்பின் காரணமாக தமிழை ஒரு மொழிப் பாடமாக எடுத்துப் படித்து வந்தார்.
இந்நூலினை தனது 10ஆம் வயதில் எழுதத் தொடங்கிய நூலாசிரியர் 12ஆட வயதில் நிறைவுச் செய்தார். சுவீடன் நாட்டுப் பள்ளியில் தான் கற்ற வரலாறு. மொழிகள் குறித்தான பார்வையோடு சுவீடன் மற்றும் நோர்வே நாட்டு மொழிகள் உருவான தகவல்களைப் படிக்கத் தொடங்கிய நூலாசிரியர்.
தனது தொடர் தேடலால் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் குறித்தான கட்டுரைகளை வாசித்து தனது வயதிற்கேற்ற புரிதலோடு இந்நூலை எழுதியுள்ளார்.
Be the first to rate this book.