நொண்டி நாடகம் என்னும் கள்ளர் இலக்கியம்
பழந்தமிழ் இயக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் விமர்சகராகவும் ஆய்வாளராகவும் பதிப்பாசிரியராகவும் செயல்பட்டு வரும் கால சுப்ரமணியம் இடைக்கால இலக்கியத்தின் இறுதியில் எழுந்த குறவஞ்சி, பள்ளு போன்ற இவிையல் சார்ந்த சிற்றிலக்கியங்களில் பரவலாகக் கவனம்பெறாத கள்ளர் இலக்கியம் என வகைப்படுத்தக்க புதிய இலக்கிய வகையான நொண்டி நாடகம் பற்றி இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார், தம் ஆய்வுநெறிக்குச் சான்றுகளாக அந்த இலக்கிய வகையின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்கும் சீதக்காதி நொண்டிநாடகத்தையும் திருச்செந்தூர் நொண்டி நாடகத்தையும் மூலபாடப் பதிப்பியல் நோக்கில் ஆராய்ந்து செம்பதிப்புகளாக முழுமையாக இந்நூலில் இணைத்தும் தந்துள்ளார். சீதக்காதி நொண்டி ஒரு இஸ்லாமியப் புலவரால் எழுதப்பெற்ற முன்னோடி இலக்கியமாகவும் தொண்டி நாடக வலையின் முன்னோடி நூலாகவும் கருதப்படுகிறது. இந்த நொண்டி நாடகக் கதைக்கருவின் கூறுகள் விலாச ாடங்கள்.ஹரிதாஸ், ரத்தக்கண்ணி போன்ற திரைப்படங்கள் எனத் தொடர்ந்து ஆட்சிசெலுத்தியிருக்கின்றன
Be the first to rate this book.