"என்ன குடிச்சிருக்கியா?"
அவன் பதில் சொல்லாமல் நின்றான்.
"திருடனா நீ? இல்ல பைத்தியமா? உம் பேரென்னடா?"
காதர் அலி அந்தக் காவலரை முறைத்துப் பார்த்துவிட்டு, ஓங்காரமாகக் கத்தியபடி, "எம் பேரு காதரலிடா. நா திருடனல்ல, பைத்தியம்டா. அதும் சாதாரணப் பைத்தியம் இல்ல, உங்களால தீவிரவாதியாக்கப்பட்ட பைத்தியம்டா." என்று கத்திக்கொண்டே அந்தப் போலீசைத் தாக்க முற்பட்டான். அவர் சுதாரித்துக்கொண்டு ஓங்கி ஓர் உதை விட்டார். அப்படியே மல்லாந்து விழுந்தான் காதர் அலி.
கூட்டம் சேர்ந்து திகைத்து நின்றது எதுவும் புரியாமல்.
"போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து ஓடிய தீவிரவாதி பிடிபட்டான்! நாட்டை சீர்குலைக்க அவன் தீட்டிய சதித்திட்டம் அம்பலம்!"
மறுநாள் நாளிதழ்களில் பரபரப்பாகத் தலைப்புச் செய்தி இப்படியாக வந்திருந்தது.
Be the first to rate this book.