நிழல்கள் சிலநேரம் நம்மைத் தொடர்கின்றன. சிலநேரம் நாம் அவற்றைத் தொடர்கிறோம். அந்நிழல் களை ஆளுமைகளுக்கு நிகராகப் பார்க்கலாம். ஏனெனில், நம்மை வழிநடத்துபவர்கள் அவர்களே. காலத்திற்கு முந்தியும் சமகாலத்திலும் தம்மைத் தாங்கிக்கொண்டவர்களை யுகபாரதி இந்நூலில் அறியத் தந்திருக்கிறார்.
நவீன எழுத்துக்காரர்கள் பலருடனும் அவருக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் அலாதியானவை. ஒருமுறைக்குப் பலமுறை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் எழுத்துநடை இரு சொற்களுக்கு இடையே இயல்பாக அவர் செய்துவிடும் பகடிகள், பரவசமூட்டுபவை. யாரையும் குறைத்துவிடாமல் தம் தோள்களில் தாங்கிக்கொள்ளும் யுகபாரதியின் மிக முக்கியக் கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
தோழமைத் தளும்பி வழியும் அவர், இக்கட்டுரைகளில் இடது, வலது ஆகிய இருவிதச் சிந்தனைப் போக்குகளையும் தொட்டுக் காட்டியிருக்கிறார். ஆளுமைகளை அவர் எழுத்தில் அறிய நேர்கையில் ஆனந்தம் பிரவகிக்கிறது.
Be the first to rate this book.