யதார்த்தவாதம் என்பது வாழ்க்கையை அப்படியே பதிவு செய்வதல்ல; அதாவது நிழல்படம் எடுத்து ஆல்பம் போடுவதல்ல; ஓவியமாய்த் தீட்ட வேண்டும். உதாரணத்துக்குக் கண்ணகியின் உருவத்தைச் சாந்த சொரூபியான அபலையாகவும் தீட்டலாம்; கைச் சிலம்பேந்தி நீதிகேட்கும் வீர உருவமாகவும் வரையலாம்; இதில் கண்ணகி என்ற நாயகி இன்றுவரை கொண்டாடப் படுவதற்கான காரணம் அபலையாக ஒடுங்கிக் கிடந்த வாழ்க்கையினால் அல்ல; பாண்டியன் அவையில் வீராவேசத்தோடு போராடிய தருணம் தான். அந்த நேரத்துக் கண்ணகியை ஓவியப் படுத்திக் காட்டுவதே யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு.
இண்டு இடுக்குகளுக்குள் புகுந்து மறைந்து கிடக்கும் புற வாழ்வின் சுவடுகளையும் உளவியல் சிக்கல்களையும் கொண்டுவந்து சக மனிதனுக்கு எடுத்துக் காட்டி எச்சரித்து வழிகாட்டுவதுதான் யதார்த்தவாதியின் பணி.
Be the first to rate this book.