போர்க்கால வாழ்வென்பதே மரணம்தான். ஒருவர் மரணிக்க வேண்டும் என்றில்லை. ஆனால், ஒவ்வொருவரினுள்ளும் ஏதோ ஒரு வடிவத்தில் மரணம் இறங்கி ஆட்டிப்படைக்கிறது. வாழ்வும் மரணமும் வேறாக இல்லை. வாழ்வுக்குள் மரணித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை பேர் மரணித்தார்கள் என்று கணக்கு வேண்டுமானால் சொல்லலாம். புள்ளிவிபரப் பட்டியல்களில் பதிவு செய்யலாம். ஒரு சமூகத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் மனதின் ஆழத்தில் மரணித்துதான் போய்விட்டார்கள். மரணத்தை சந்தித்துதான் விட்டார்கள் என தானா விஷ்ணுவின் கவிதையிலுள்ள மனிதர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
Be the first to rate this book.