இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் தனித்த மொழிநடை உருவகம் உத்தி போன்ற அளவீடுகளால் கணித்து எடைபோட முடியாத தொனியில் கட்டற்ற சுதந்திரத்தன்மையுடனும் தடங்கலற்று கதை கூறும் முறையில் எழுதப்பட்டவை. இச்சிறுகதைகளில் உயிர்த்திருக்கும் கதாபாத்திரங்கள் நகரம் சார்ந்த வாழ்வில் நாம் அன்றாடம் காணும் இயல்பு மனிதர்களை மையமாகக் கொண்டவை. இக்கதாபாத்திரங்களின் வாழ்க்கை விரைவோட்டத்தில் திடீரெனக் குறுக்கிடும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் தடுமாற்றங்களையும் பதற்றங்களையும் உணர்வச்சங்களையும் உளவியல் வெளியில் சீர்தூக்கி உண்மை சொரூபத்தின் வழியாகச் சஞ்சாரம் செய்பவை. தவிரவும் தற்கால நகரவாழ்வின் நிச்சயமற்றதன்மையை, எதிர்கால இருப்பின் அவலத்தைப் பிரதான ஆதாரப்புள்ளியாகக்கொண்டும் இயங்குபவை. நவீன நகர வாழ்வின் புதிய உலகை புதிய கோணத்தில் அணுகவும் முயல்பவை. உறவுகளுக்கிடையேயான மனக்குரூரங்களை மனமாறுதல்களை மனமுரண்பாடுகளை மனநெகிழ்வுகளைக் குணாம்சம் சார்ந்தும் சித்தரிப்பவை.
-என். ஸ்ரீராம்
Be the first to rate this book.