எவன் புற உலக உடைமைகளை அல்லது புற உலகின் சாதகமான அம்சங்களை பெற விளைகிறானோ அவன் அதற்கு கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். கைகளை கட்டிக்கொண்டு தான் பாட்டுக்கு வேண்டியதற்காக அது கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அவன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது சுவர்கலோக உடைமைகளை எந்த முயற்சியும் இன்றி உங்களால் பெற முடியும் என்று வீணாக கற்பனை செய்யாதீர்கள். உண்மையின் பிரதேசத்தில் நீங்கள் உளமாற பணி செய்யும்போது தான் வாழ்வு என்னும் உணவை உண்ண அனுமதிக்கப்படுவீர்கள். பொறுமையோடு முணுமுணுப்பின்றி ஆன்மீக உழைப்பில் நீங்கள் ஈடுபடும்போது நீங்கள் கேட்ட ஆன்மீக ஊதியம் உங்களுக்கு மறுக்கப்படாது.
Be the first to rate this book.