தலையில் ஒன்றுமில்லாமல் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு விதை விதைக்கிறான். தலைமுறை தத்துவமாக வந்துவிட்ட ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறான். அவனைப் பார்த்தால் ஒரு மரத்துக்குக் காலும் கையும் முளைத்த மாதிரி இருக்கிறது! உள்ளத்தில் குழந்தை போன்றவன். விதைக்கிற விதைகளைப் பயபக்தியுடன் விதைக்கிறான்.
எவ்வளவு சிறிய விதைகள். அவை உயிர் பெற்று உரம்பெற்று முளைத்துப் பயிராகிப் பெரிதாகக் கதிர்விட்டு காய்த்துக் குலுங்க வேண்டும். உலகில் எங்கு விதை விதைத்தாலும் தத்துவம் இதேதானே! பாலஸ்தீனமானால் என்ன? அமெரிக்காவானால் என்ன? நார்வேயின் பள்ளத்தாக்குகளானால் என்ன? இது விரிந்து கிடக்கிற உலகம். இதோ ஐஸக் இந்த உலகில் ஒரு சிறு புள்ளி. முறம் போன்ற தன் கைகளை விசிறிவிசிறி விதைகளை விதைக்கிறான்! மேலே வானம் மழை கொட்டுகிறது.
Be the first to rate this book.