ஏழை பணக்காரன், ஆண் பெண், சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, பணம்.
சம்பாதிக்கும் வழி மட்டுமல்ல. எப்படி செலவு செய்யலாம், எப்படி செய்யக்கூடாது, மீதம் செய்யும் வழிகள் என்ன, சேமித்ததை எதில் முதலீடு செய்யலாம் ? என்று பணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது. தவிர, வருமான வரி, தேச பொருளாதாரம், சர்வதேச காரணங்களால் நாட்டில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், தங்கம், கச்சா எண்ணெய் என பணம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை ஏராளம். பணம் குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகள் நடத்துபவரும், அள்ள அள்ள பணம் பணம் சில ரகசியங்கள் போன்ற 15 புத்தகங்கள் எழுதியிருப்பவருமான , சோம வள்ளியப்பன் மக்களின் பணம் குறித்த சந்தேகங்களுக்கு சொல்லி இருக்கும் பதில்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். புரிந்து கொள்ள எளிதாக, படிக்க சுவாரசியமாக மட்டுமல்லாமல், மிகவும் பயனுள்ளதொரு புத்தகம் சோம வள்ளியப்பனின் நிதி, சேமிப்பு, முதலீடு, வரி : கேள்வி பதில்கள் புத்தகம்.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.