வீட்டுக்குள்ளேயே ஒரு பெண்ணை மூலையில் முடக்கிப் போடுவதை வழக்கத்துக்கு விரோதமானது என்று இன்று நாம் கருதுகிறோம். ஒரு காலத்தில் அதுதான் வழக்கமாக இருந்தது. அப்படி விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்" என்று முழங்கினான் பாரதி.
அவனும் அவனைப் போன்ற பலரும் கனவு கண்டது போல பல வீரப்பெண்கள் காலம் தோறும் உருவாகி, பொந்தில் வைத்த அக்கினிக் குஞ்சுகளாகத் திகழ்கிறார்கள். அக்கினிக் குஞ்சுகளைக் காட்டிலோர் பொந்திடை வைத்ததும், வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை. பல சாதாரணப் பெண்கள்தான் அசாதாரண வேலைகளைச் செய்திருக்கிறார்கள். இந்த அக்கினிக் குஞ்சுகள் எரித்த தடைகள் பல.
ஆனால் நமது சரித்திரப் புத்தகங்களில் இவர்களில் பலர் இல்லை இருக்கும் சிலர் பல பெயர்களில் ஒரு பெயராய் வரிகளில் ஒளிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகச் சிலருக்கே ஓரிரு பத்திகளோ பக்கங்களோ அவற்றில் கிட்டியதுண்டு.அவர்களில் சிலரை இங்கே சந்திப்போமா ?
40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வந்தவர்.
வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி, கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினியர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர்.
நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி, 1978 முதல் பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தினார். 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.
பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார். 40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நிருபராகப் பணியாற்றினார். இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே, 1982-ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார் விசிட்டர், விசிட்டர் லென்ஸ், ஜூனியர் விகடன், இந்தியா டுடே தமிழ் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய இவர், ஜூனியர் போஸ்ட் இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். தொலைக் காட்சிக்கான முதல் இதழ் டி.வி உலகம்', சென்னை நகரத்துக்கான முதல் இதழ் ஏழு நாட்கள்' ஆகியவை இவரது முயற்சிகள். சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999-ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்தார்.
2016ல் தமிழில் மாணவர்களுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்தார். ஞாநியின் கடைசி முயற்சி யூ டியூப் சேனலில் ஓ பக்கங்கள்.
Be the first to rate this book.