மு. இரவிச்சந்திரன் (எ) காவிரிமைந்தன் என்னும் புனைப்பெயரில் இலக்கிய உலகில் - குறிப்பாக சென்னையில் பம்மலில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் என்கிற பெயரில் கடந்த 34 ஆண்டுகளாக கண்ணதாசன் புகழ்பாடி கவியரசருக்கு திருவுருவச் சிலை அமைக்கவும் கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை உருவாக்கத்தில் அடிநாதமாய் விளங்கி, தொடர்ந்து செயல்பட்டுவரும் இவர் 13 நூல்களையும் இயற்றியும். 3 நூல்களைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். கடல்கடந்த தேசங்களிலும் கண்ணதாசன் புகழ்பரப்பி வரும் காவிரிமைந்தன் துபாய், அபுதாபி, மஸ்கட், மலேசியா. அந்தமான் என எல்லைகளை விரித்தும், இணையதள வாயிலாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இலண்டன், ஜப்பான், சிங்கப்பூர் முதலான நாடுகளுடன் இணைந்தும் செயலாற்றி வருபவர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் ஒரு தீவிர ரசிகன் என்கிற தகுதியோடு அவர்தம் திரைப்படப் பாடல்களை சிறுவயது முதல் ரசித்து ரசித்து அதில் உள்ள கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவன். அப்பாடல்கள் வெறும் சினிமாப் பாடல்கள் அல்ல.. வாழ்க்கைக்கு வேண்டிய அரிய பெரிய தத்துவங்கள். இலட்சியங்கள். கோட்பாடுகள் என மேலாண்மை வகுப்புகளில் போதிக்கப்படும் எத்தனையோ விஷயங்கள் பாட்டுக்குள்ளே பொதிந்திருக்கின்றன என்னும் உண்மையை உணர்ந்து அவற்றை மக்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்நூல் உருவாக்கப்படுகிறது
Be the first to rate this book.