ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தொடக்கத்தில் சில ஆண்டுகளும், பின்னர் தொடர்ச்சியாக 27 ஆண்டுகளும், ஆக மொத்தம் 10,000 நாள்களுக்கு மேலாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா. பெருமைக்குரியவர் செல்வாக்கான குடுபத்தில் பிறந்த மண்டேலா, தனக்காக மட்டுமே வாழ்ந்திருந்தால், ஆங்கிலேயர் ஆட்சியில் சகல வசதிகளோடு பவனி வந்திருக்கலாம். ஆனால், தன் கருப்பின மக்களின் விடுதலைக்காகச், சுகமான வாழ்க்கையைத் துறந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிச், சிறையில் துன்பங்களை அனுபவித்தார்.
சத்யாகிரகப் தொடக்கத்தில் மகாத்மா காந்தியடிகளின் போராட்டத்தைப் பின்பற்றிய நெல்சன் மண்டேலா, பின்னாளில், ஆயுதப் போராட்டத்திற்குத் தடம் மாறினார். தனது முடிவிற்காகப் பின்னர் வருந்தியதும் உண்டு. ஏனோ, அஹிம்சைப் போராட்டத்தில் காந்தியடிகளைப் போன்று, அவரால் கடைசி வரை உறுதியாக, நீடித்து நிலைத்திருக்க முடியவில்லை. அதற்காகச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். நாட்டின் விடுதலை வேள்வியில் அமைதிப் போராட்டம் மற்றும் ஆயுதப் போராட்டம் இரண்டுக்குமே இடமுண்டு.
விடுதலையான மண்டேலா நாட்டின் அதிபராகப் பதவியேற்றார். அமைதிக்கான 'நோபல் பரிசு' உள்பட ஏராளமான விருதுகள், பரிசுகள், பாராட்டுகள் அவரைத் தேடி வந்தன. 1918 ஜூலை 18 பிறந்த மண்டேலா 2013 டிசம்பர் 5இல் தனது 95ஆவது வயதில் இயற்கை எய்தினார். கருப்புச் சூரியன் மறைந்தாலும், கருப்பின மக்களுக்காக அவர் ஏற்றிய சுதந்திர ஜோதி புகழொளி காலமெல்லாம் வீசிக் கொண்டிருக்கும்.
Be the first to rate this book.