நெகிழி 1907இல்தான் பெல்ஜிய அறிவியலறிஞர் லியோ பேக்லாண்டால் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது நெகிழிகளால் பல்வேறு தரங்களில் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன.
இப்போது விண்ணில் ஏவப்பட்ட சந்திராயனில் கூட மாழைகள், நெகிழிக் கண்ணாடி போன்றவை பயன்படுகின்றன. நெகிழிகள் ஒருபுறம் நன்மை செய்வதைப் போலத் தெரிந்தாலும் தவிர்க்க முடியாத தீமைகளை நிறையவே செய்கின்றன.
நெகிழிக் கழிவுகள் பெருங்கடல், ஆறு, குளங்களில் கொட்டப்படுகின்றன. கடைகளில் விற்கப்படும்
பொருட்களின் பொதியுறைகள் காற்றில் பறந்து மண்மேல் பரவி, மக்காமலும் மழைநீரைக் கீழே இறங்கவிடாமலும், புல் பூண்டு முளைக்காமலும் தடுக்கின்றன.
இவற்றை மீட்டெடுத்து, மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் அளவு மிகக் குறைவு. இவற்றால் சுற்றுச்சூழல்,உடல் நலம், சமூகம் பெருமளவு சீர்கெடுகின்றன.
+ நாம் பழைய வாழ்க்கை முறைக்கு மாறுவது இயலாது. அதிலுள்ள நல்ல இயல்புகளைப் பின்பற்ற வேண்டும்.மண் பாண்டங்கள். கண்ணாடி. துருப்பிடிக்காத எஃகு ஆகியவற்றின் பயன்பாட்டை மிகுவிக்க வேண்டும். நெகிழியைத் தவிர்க்க முயல வேண்டும்.
இல்லாவிட்டால். ஜி.நாகராசன் சொன்னதைப் போல “நாளை மற்றுமொரு நாளே” என்றுகூட இல்லாமல் போகும். “நாளை மேன்மேலும் நீர்கெட்ட நாளாகும்.”
Be the first to rate this book.