இன்றைய தொழில் நகரம் சார்ந்த முன் மாதிரி நகரம் அது. நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாயக்கழிவுகளெல்லாம் இல்லாமல் போகிற சுற்றுச்சூழல் கனவு பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. அந்த நகர மனிதர்களும் நொய்யலின் சாயக் கழிவு இல்லாமல்போவது போல் நல்ல சுத்தமான மனிதர்களாக வேண்டும் என்ற ஆசையின் படிமமாக அதைக் கட்டமைத்துக்கொள்ளலாம். தமிழ் படைப்புலகில் தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் தீவிரமாக இயங்கிவருவதன் அடையாளம் இந்நாவல்.
-பிரபஞ்சன்
பலமான உரையாடல் தளங்கள்… சிறுசிறு தொன்மங்களின் மீட்சிகள், முஸ்லீம் சமூக வாழ்க்கை. குற்றவுணர்வுடன் சமீப நிகழ்வுகளைப் பார்க்கும் கிறிஸ்துவ இளைஞன். சேர்ந்து வாழ ஆசைப்பட்டு சமூக நிர்பந்தங்களால் நிலை குலைந்துபோகும் இருவர். இவர்களின் வாழ்க்கை திருப்பூரின் இன்னொரு முகமாக விரிந்திருக்கிறது.
-சி.ஆர். ரவீந்திரன்
Be the first to rate this book.