வாழ்க்கையைப் பற்றிய எத்தகைய வியாக்கியானங்களையும் விட மேன்மையானது வாழ்க்கை. அதையும் விட மேலானது அந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள். நீங்கள் என்பது நீங்கள் மட்டுமல்ல. நீங்களும் உங்களோடு இணைந்தும் இணையாமலும் கலந்தும் கலவாமலும் இருக்கும் மற்றவர்களும். மற்றவர்களும் நீங்களும் மட்டுமல்ல, புல், பூண்டு, மரம், செடி, நத்தை, கடல், ஆகாயம், காடு, மலை, மழை, வெயில், அணில், மயில், பச்சை, சிவப்பு, மஞ்சள், சுறுப்பு, வானவில், எறும்பு, புலி, காற்று, அலை, விண்மீன்கள், குண்டுமணி, நாய், காட்டுப் பூக்கள், கனிகள், நகரம், கிராமமம் என இந்தப் பெருவெளியில் உள்ள அனைத்துமே. அப்பால், கண்ணீர், இரத்தம், மகிழ்ச்சி, காதல், அன்பு, பிரிவு, கொண்டாட்டம், அலைவு எல்லாமும்தான். இந்தக் கவிதைகள் இவற்றின் முகம். இவற்றின் நிறம். இவற்றின் மணம். உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் மேலும் விரிவாக்கும் வல்லமையைக் கொண்ட இந்தக் கவிதைகளுக்கும் உங்களுக்குமான உறவு தித்திப்பும் நித்தியமுமானது. ஆம், இவை உங்களுடைய கவிதைகள், உங்களுக்கான கவிதைகளே.
Be the first to rate this book.