நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர். இத்தகைய நீரைச் சேமித்து வைக்கும் குளங்களும் ஏரிகளும் இன்று மண்மேடாகிக் காணப்படுகின்றன. மழைக்குக் காரணமான காடுகள் அழிக்கப்பட்டன. மரங்கள் வெட்டப்பட்டன. இந்தப் புவியையும். நீரையும் பாதுகாத்து நம் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்வது நம் கடமையாகும். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைக்குத் தேவையான கழிவுநீர் மறுசுழற்சி என்பதை மையக்கருவாக்கி இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் இருந்து நகரத்துக்குச் சென்று புவியியல் சார்ந்த மேற்கல்வி பயின்று வரும் ஆதித்யா தான் இக்கதையின் நாயகன். அவனது மாமா பெண் சுகந்தி தான் நாயகி. இவர்களது காதலுக்கு இடையூறாகக் கிராமத்தின் தண்ணீர் பிரச்சினை அமைந்துவிடுகிறது. வறண்டு கிடக்கும் கிராமத்தையும், கழிவுநீர் கலந்து மாசாகிக்கிடந்த அந்த ஊர் ஆனைக் காத்தான் வாய்க்காலையும் சரிசெய்ய ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆதித்யா எண்ணுகிறான். அவனுக்குத் துணையாக அவனது நண்பன் இணைகிறான். இந்த இருவரும் தங்கள் காதல் துணையோடு சேர்ந்து வாய்க்காலைச் சரி செய்ய நினைக்கிறார்கள். ஊர்மக்கள் துணையையும் கேட்கிறார்கள்? ஊர்மக்கள் அவர்களுக்குத் துணையாக வந்தார்களா? இந்த நால்வரும் வாய்க்காலைச் சரி செய்தார்களா? ஊரின் தண்ணீர்ப் பஞ்சம் தீர்ந்ததா? என்பதை இந்தக் கதையைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
"இந்தப் புந்தகம் வெளிவருவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொண்ட திரு.கே.ஆர்.என்.மனோஜ் திருப்பூரை சேர்ந்த இளைஞர். மெக்கானிக் என்ஜினியரிங்கில் எம்.டெக் முடித்திருக்கிறார் அதே சமயம் எலக்ட்ரிகல் பிரிவிலும் பரிச்சயம் மிக்கவர். இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக் சயின்ஸ துறையில் ஸ்பெஷலிஸ்ட் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கள் விக்கும் வேலை வாய்ப்புக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் CADD ட்ரெய்னர், தொழிலதிபர் கலை இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்"
Be the first to rate this book.