நதியிட்ட மணற்மேடுகள்
அன்றில் பறவைகளானது
நிலவிட்ட எச்சங்கள்
சாமந்திப் பூக்களானது
மிதப்பிட்ட அலைகள்
கண்ணாடி பிம்பமானது
மோதிட்ட தென்றல் தொட்டில்
குழந்தையானது சுனையிட்ட
நீருற்றுக்கள் நிறைசூலி
கருப்பையானது குழவியிட்ட
வடுக்கள் தேன் ராட்டுக்களானது
கொடியிட்ட பிச்சிகள் மலர்ச்
சோலையானது வானிட்ட முத்துக்கள்
வட்டக் குளமானது நானிட்ட
முத்தங்களோ வற்றாத நதியானது..
Be the first to rate this book.