அறிவு, தர்க்கம், கற்பனைத் திறன் போன்ற ஆற்றல்கள் நம்மிடம் இருந்தாலும் இயல்பான காமன் சென்ஸ் எனும் பொக்கிஷத்தைப் பயன்படுத்த முடியாமல் நாம் திணறுவது ஏன்?
வாழ்வில் சவால்களைச் சந்திக்கையில் அல்லது நெருக்கடியான தருணங்களில் ஒரு முடிவெடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, நம்மையும் அறியாமல் நாம் கையில் எடுக்கும் ஆயுதமே காமன் சென்ஸ். ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் இந்த காமன் சென்ஸின் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோமா?
நாம்...
• ஏன் அடிக்கடி கோபப்படுகிறோம்?
• ஏன் எளிதில் குற்றவுணர்வு கொள்கிறோம்?
• ஏன் பொய் சொல்கிறோம்?
• ஏன் விமர்சனங்களை வெறுக்கிறோம்?
• ஏன் நேர்மையான உரையாடல்களைத் தவிர்க்கிறோம்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காமன் சென்ஸின் துணையோடு விடை காண்கிறது இந்தப் புத்தகம்.
வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் தர்ம சங்கடமான சூழல்களையும் தவிர்க்க நமக்குப் பெரிதும் உதவுகிறது COMMON SENSE என்ற மந்திர வார்த்தை. தினம் தினம் நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் எப்படி காமன் சென்ஸை நாம் பயன்படுத்தலாம் என்ற பார்வையை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.
Be the first to rate this book.