தமிழில் பிரமிள் தொடங்கி ரமேஷ் பிரேம், கோணங்கி வரையிலான ஆட்டோரைட்டிங் படிமங்களால் ஒரு மனம் நிலம் உடல் சார்ந்த உளவியல் பாங்கை மொழியில் தக்க வைக்க முயல்கிறது எனவும் அதற்கு ஒரு பார்வையை வழங்க முடியும். சமஸ்கிருதமும் தமிழும் முயங்கிய மணிப்பிரவாள நடை இந்த கவிதைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கிறது என்று கூடச் சொல்லலாம். சிறு சிறு கண்ணிகளாக துண்டாடப்பட்ட வினைவலங்களுடன் தன் தனிமையில் அசையிடும் எண்ண உற்பாதங்களுடன் பல்வேறாக உறவாடுகிறது. அர்த்தத்திற்கு சிரமப்படாமல் சில கவிதைகளை மொழியின் இசை போலவும் வாசித்து விடலாம்.
நகரும் காலங்கள் நிகழும் சம்பவங்கள் சொற் கூட்டத்தில் பிடிபடும் ஒரு சிறு பறவை கூடுமுனைந்து அதில் வைக்கும் சேமிப்பு என பாரிசாகரன் இந்த மொழியைக் கண்டறிந்திருக்கிறார். ஆழ்ந்த பொறுமையும் பல பருவங்களை நாட்களைக் கழித்துக் சுட்டியவகையில் வைராக்கியத்தோடு தன்னிலைத் தாபங்களையும் ஒருசேர இக் கவிதைகள் ஒப்படைக்கின்றன. இத்தனைக்கும் வெளியே ஒரு ஆண் மனதிற்கு வெளியே புறப்பொருள் மாய்மையாக ஒரு பெண் இருக்கிறாள் என்பதுதான் எந்நாளுக்குமான சிந்தனை புள்ளி.மொழியைக் காட்சிக்குள்ளும் காட்சியை மொழியின் மடிப்பினுள்ளும் வைத்திருக்கும் இதில் பாரிசாகரன் எங்கோ தனித்தும் எங்கோ பொதுவிலும் இருக்கிறார்.
-யவனிகா ஸ்ரீராம்
Be the first to rate this book.