சித்த மருத்துவர் வி.எம் ஜெயபாலன் அவர்கள் 36 ஆண்டுகளாக ஆன்மீகம், விஞ்ஞானம், ஜோதிடம் இவைகள் மூன்றையும் இணைத்து "இணைந்த விஞ்ஞானம்" என்ற அடிப்படையில் இந்தியா மற்றும் மலேசிய நாட்டில் சித்த மருத்துவப் பணி ஆற்றி வருகிறார். தான் அனுபவரீதியாக உணர்ந்ததை, 50 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கடைபிடித்ததை, இன்று நாம் மறந்ததை முழுமையாக நினைவுபடுத்தி, இயற்கை முறையில் மருந்தில்லா மருத்துவமாக வீட்டு வைத்தியமே உடலுக்கு வைத்தியம் என்று நாம் வாழ்நாளில் தினமும் காலை முதல் மாலை வரை எப்படி இருந்தால் நோயின்றி நூறாண்டு காலம் வாழலாம் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். மேலும், மருத்துவர் இன்று வரை எழுதி முடித்த நூல்களைத் தொடர்ந்து நம் பதிப்பகம் வெளியிட இருக்கிறது. அவற்றுள் சில நூல்களின் பெயர்கள் "புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்", "1965 முதல் 2025 வரை சர்க்கரை வியாதியும் தீர்வும்", "64 வகைத் தலைவலிகள்", "ஏழு முகம்" (மனவியல் மருத்துவம்). மருத்துவர் வி.எம் ஜெயபாலன் அகத்தியர்தாசன் என்ற புனைப் பெயரில் "அகத்தியர் வேதம்", "ஆதி பகவன்" போன்ற 12 ஆன்மீக நூல்களையும் எழுதி மலேசிய நாட்டில் வெளியிட்டுள்ளார். எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியவர் அகத்தியர் ஒருவரே என்பது நூலாசிரியரின் ஆணித்தரமான கருத்து. மருத்துவர் வி.எம் ஜெயபாலன் அகத்தியருக்கும், சித்தர்களுக்கும் தியான மண்டபம் கட்டித் தொடர்ந்து 21 வருடங்களாக அன்னதானம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-பதிப்பகத்தார்
Be the first to rate this book.