அய்யப்ப மாதவனின் கவிதைகளோடு ஆழமாக உறவாட இறங்கும்போது, ஒரு கட்டத்திற்கு அப்பால் நமது மனம் காதலையும் கவிதையையும் தவிர வேறு எதுவுமற்ற உலகத்தில் தனியே துாக்கிவீசப்பட்டதைப்போன்று ஆகிவிடுகிறோம். வாசித்த பிறகு, மொழியை அழித்துவிட்டால் கூட கவிதை நமது மனதில் உட்கார்ந்திருப்பதை நேரடியாக பார்க்க முடிகிறது. அதுவே அய்யப்ப மாதவனின் கவிதைகளின் பலம். அளவற்ற தனிமையும் ஆர்ப்பரிக்கும் காதலும் மொழியின் அனைத்து சொற்களுக்குள்ளும் ஒரு குட்டிமீனைப்போன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த மீன் குஞ்சை நம் மனதால் பின்தொடராமல் இருக்கவே முடியாது. அந்த மாயம்தான் அய்யப்ப மாதவனின் கவிதைகளின் பலம். தமிழில் வேறு எந்தக் கவிஞனிடமும் காதலும் கவிதையும் அதை உள்ளுணர்வுக்குள் கடத்தும் இந்த ஆற்றலும் இல்லை. அது அய்யப்ப மாதவனின் கவிதைகளில் மாத்திரமே உண்டு. காதலின் பல பரிமாணங்களை கவிதைகளில் உள்ளே வழிந்தோடச் செய்யும் பலர் உள்ளனர். ஆனால், அய்யப்ப மாதவன் தனது கவிதைகளை அன்பையும் பரிவையும் காதலின் மென்மைாயான ஏக்கத்தையும் தவிப்பையும் மிக அளவோடு உருவாக்குபவர். காற்றடிக்கும் போது சலசலக்கும் மரத்தின் இலைகளைப்போன்று அற்புதமானவை.
- கவிஞர் ரியாஸ் குரானா, இலங்கை.
Be the first to rate this book.