தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாற்றை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், நீலமலையின்(நீலகிரி) தொல்லியல் வெளிகளான பாறை ஓவியங்கள், பெருங்கல்லறைகள், நடுகற்கள், கல்வெட்டுகள், பழங்குடியினர் வரலாறு, சடங்குகள் உள்ளிட்ட ஒரு மலையின் பன்முக வரலாற்றுத் தரவுகளை உள்ளடக்கிய தொல்லியல் களஞ்சியமாக வெளிவந்துள்ளது.
நூலில்;
நிழற்படங்கள் -146
விளக்கப்படங்கள் - 90
அட்டவணைகள்-17
நிலவரைபடங்கள் -13
வரைபடங்கள் - 2.
பக்கங்கள்: 448, முழுமையான வண்ணப் படங்களுடன்.
5
Bala N 26-12-2025 04:53 pm
5 நீலமலைத் தொல்லியல்
நீலமலைத் தொல்லியல் என்னும் இந்நூலானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங்கள் பெருகற்படைச் சின்னங்கள் பழங்குடி மக்கள் வழிபாடு சார்ந்த தொடர்புறவுகளை ஆவணப்படுத்திய நூலாகும். நீலமலைத் தொடர்களைப் பற்றி புரிதலையும் மாறுபட்ட பார்வையையும் நமக்கு அளிக்கிறது. தொல்லியல் சின்னங்கள் பற்றிய அறிமுகத்தை மும் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய நிலை பற்றிய பதிவுகள் சமூக அக்கறையின் வெளிப்பாடாகும். பாறை ஓவியங்கள் பண்டையமக்கள் பண்பாட்டுத் தளமாகும். சிந்திக்க தொடங்கிய மனித நாகரீகத்தின் மைல்கல் ஆகும். இவ்வோவியங்கள் குறித்த முறையான புரிதலை எடுத்துரைக்கும் விதமாகவும் அப்புரிதல்கள் பழங்குடி மக்களோடு எத்தகைய பண்பாட்டுத் தொடர்புறவு கொண்டிருக்கிறது என்பதை களஆய்வு முடிவுகளின் வழி எடுத்துரைப்பது பாராட்டுக்குரியது. நீலமலை பாறைஓவியங்களை தொகுத்து அவற்றை பகுப்பாய்வு செய்து இனக்குழு சமூக கலாச்சார வாழ்வியலில் முடிவுகளாகப் பெற்று அவற்றின் மீதான மதிப்பீடும் இந்நூலில் ஆய்வுத்தன்மையை வலுப்படுத்துகிறது. அட்டவணைகள் வரைபடங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை புரிய வைக்கும் முயற்சி தனித்த மேம்பட்ட ஆராய்ச்சி அணுகுமுறையாகும். கல்விப்புலம் சாராத தன்னார்வ ஆர்வலர்களின் பல ஆண்டு உழைப்பின் வடிவம் இந்நூல். இந்நூலில் அணுகுமுறையும் எடுத்துரைக்கும் விதமும் நூலாசிரியர்களை ஆராய்ச்சியாளர்கள் என்ற முறையில் அவர்களை பார்க்கத் தோன்றுகிறது. தொல்லியல் பாறைஓவிய பண்பாட்டு சார்ந்த இந்நூல் தமிழக வரலாற்றிக்கு வலுச்சேர்க்கும் புதிய வரவாகும். தொல்லியல் மானுடவியல் வரலாற்றியல் சார்ந்த ஆய்வாளர்களும் மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய முக்கியமான நூலாகும்.
Kumaragurunathan Annadurai 26-12-2025 04:35 pm
5
Vishnu priya 18-12-2025 04:03 pm