'துயரங்கள் உங்களைத் தளர்வடையச் செய்யவில்லையா அப்பா என்று நான் கேட்ட போது, கம்யூனிஸ்ட் என்பது கட்சியில் இருப்பது மட்டுமல்ல. களத்தில் நிற்பது! கம்யூனிசம் அடையாளம் மட்டுமல்ல. அது அர்ப்பணிப்பு! ஏற்றுக்கொண்ட கொள்கையும், சமூகத்தின் மீதிருந்த அக்கறையும் அந்த பலத்தைக் கொடுத்ததாகச் சொன்னார்.
இந்த சமூகத்தின் மீட்சிக்கு இடதுசாரிகளின் எழுச்சியே இன்றைய மாபெரும் தேவையாக உள்ளது என்கிறார் அப்பா.
வாழ்வதில் மிகப் பெரிய மகிமை. வீழ்ந்து விடாமல் இருப்பதில் இல்லை, விழும்போதெல்லாம் எழுவதில்தான் உள்ளது.
நான் வியந்து பார்த்த ஒரு கம்யூனிஸ்ட்டின் பெருமிதம் மிக்க பயணத்தின் சிறு துளியே இந்த நூல்.
புனைவில்லாத இந்த நூலில் அன்பு, காதல், பாசம், கோபம். பகை, போராட்டம் எனப் பல நூறு உணர்வுகள் நிரம்பியுள்ளன.
Be the first to rate this book.