மகிழ்ச்சியூட்டல் தான் குழந்தை இலக்கியத்தின் அடிப்படை. அதன்பிறகே மற்ற சங்கதிகளான கருத்து, செய்தி, நீதி, நன்னெறி எல்லாம் வாலைப் போன்று நீண்டு கொண்டு வரும். அந்தவகையில் சரிதா ஜோவின் எட்டுக்கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு அந்த ஆனந்தத்தைக் குழந்தைகளுக்கு நிச்சயமாகக் கொடுக்கும்.
சரிதா ஜோவின் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தை இலக்கியத்தின் அனைத்து வகைமையிலும் எழுதப்பட்டுள்ள கதைகள். ஒரே நேரத்தில் அறிவியலையும், இயற்கையையும், அதீதங்களையும் குழைத்து அழகான சிற்பங்களாக வடித்திருக்கிறார். அனைத்துமே குழந்தைகளின் மனதில் மிகச்சிறந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இக்கதைகளின் வழியாகக் குழந்தை இலக்கியத்திற்கு காத்திரமான ஒரு படைப்பாளி கிடைத்திருக்கிறார்.
– எழுத்தாளர் உதயசங்கர்
ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சரிதா ஜோ,உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும், தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்கிறார்.
'ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்தியா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை இவருடைய முதல் சிறார் நாவலாகும்.
Be the first to rate this book.