நினைத்தவை எல்லாம் நடப்பதில்லை; நடப்பவை எல்லாம் நினைத்தவை அல்ல; மற்றொன்று சூழினும் ஊழ் முந்துறும். பாதிக்கப்பட்டோரின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்களே. நீதிமன்றங்கள் அளிப்பது சட்டநீதி; தர்ம நீதி அல்ல. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; செய்யாத தவறுக்கு எவரும் தண்டிக்கப் படக்கூடாது. இதுவே நீதிபதிகளின் தாரக மந்திரம்' (முக்கியக் கோட்பாடு). வாதிக்கத் தவறியவற்றையும், சாட்சியங்களின் அடிப்படையில், கவனித்து முடிவு செய்யவேண்டும். இந்நூலில் கண்டுள்ள தீர்ப்புகள் பலவும் அதனை உறுதிப்படுத்தும் என்பதை படிப்போர் உணரலாம்.
Be the first to rate this book.