மனிதநேயம் என்கிற மனிதப்பண்பின் உன்னத வெளிப்பாட்டைக் குறிக்க அன்பு, பாசம், பரிவு, இரக்கம், கருணை போன்ற சொற்கள் வழக்கில் இருப்பினும், கடைசியாக குறிப்பிட்ட ‘கருணை' மனித நேயத்தினை தெளிவாக அடையாளப்படுத்தும் ஒரு சொல். பிரான்சு நாட்டில் பிறந்து, தனது வளமான மேற்குலக வாழ்க்கையைத் துறந்து, மொழி, பண்பாடு அனைத்திலும் வேறுபட்ட ; போக்குவரத்து, மின்சாரம் இவற்றை அறியாத, ஏன் ஒருவேளை உணவைக்கூட எளிதாகப் பெறமுடியாத உலகில் பிறருக்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பெண்ணொருத்தியின் சொந்தக் கதையை அவளுடைய வழித்தட உண்மையை எழுத்தில் வடித்திருக்கிறேன்.
- நா. கிருஷ்ணா
Be the first to rate this book.