பல காதல் கதைகள் இதற்குள் வருகின்றன. ஒவ்வொருவரின் பின்னணியிலும் குறைந்தபட்சம் ஒரு காதலாவது இருக்கத்தான் செய்கிறது. இவ்வளவுதான் என்று முடித்துவிட இயலாத அளவு காதல் வகைகள் புதிது புதிதாகக் கிளைத்து வருகின்றன. அதனால்தான் எழுதித் தீராத விஷயமாகக் காதல் இருக்கிறது. காதலை உயிரியல்பு என்று பார்க்காமல் மனிதப் பலவீனம் என்று காண்பது பிரச்சினைகளுக்கு மூல காரணம். ஆனால் காதல் ஒருபோதும் வலிமை குன்றுவதில்லை. காதலின் வலிமையை நோக்கித்தான் இந்நாவல் பயணம் செய்கிறது.
- முன்னுரையில்
Be the first to rate this book.