மணிமுடிகளில் ஓர் அணிமுடி
இந்நூல், மலைபடுகடாம் நூலுக்கு வந்துள்ள ஓர் எளிய உரையோ என எண்ணுவதற்கு இங்கு இடமில்லை. கதைக்கரு என்னவோ மலைபடுகடாம். ஆனால் படைப்பு புதியது; கோணம் புதியது; அணுகுமுறை புதியது; கதையின் நடப்பியல் புதியது; பார்வை புதியது; கற்பனை புதியது; எழுத்து புதியது; எழுத்தாளரும் புதியவர். நூலின் கதையோட்டத்தில் விறுவிறுப்பாய் சங்ககாலத்தில் நடைபெற்ற நிகழ்வைக் குறுநாவலாக்கியுள்ளார். இந்நாவலின் வர்ணனைக் காட்சிகள் அத்தனையும் சிறப்பாக உள்ளன.
நன்னனின் நவிர மலையாகிய ஜவ்வாது மலை பற்றி பல நூல்களும் ஆய்வுகளும் வெளிவந்திருந்தாலும், 'நவிரம்' எனும் தலைப்பில் வெளிவந்திருக்கும் இக்குறுநாவல் நன்னனின் மணிமுடிகளில் ஓர் அணிமுடி, நன்னனுக்கு அணிவித்திருப்பவர் நூலாசிரியர் இளையதமிழன். இவருக்கும் இது அணிமுடி இளையதமிழனுக்கும் இந்நூலுக்கும் பல விருதுகள் கிடைக்கும் என்பது என்னுடைய நியாயமான எதிர்பார்ப்பு.
-முதுமுனைவர் க.விஜயகாந்த்
தமிழ்ப் பேராசிரியர்
Be the first to rate this book.