தமிழ்க் கல்விப் புலத்தில் இன்றைய காலகட்டத்தில் மிகுதியான அளவில் கருத்தரங்குகள் நடத்தப் பெறுகின்றன. சடங்குகளுக்காக நடத்தப்பெறும் கருத்தரங்குகளில் ஆய்வின் தரம் குறைவது இயல்பு. பணி நிமித்தமாகவோ, பதவி உயர்வுகளுக்காகவோ ஆய்வுக் கட்டுரைகளை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு ஏற்படுவதை இந்தப் பின்புலத்தில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், இத்தகைய சூழலிலும் தரமாக கட்டுரை எழுத வேண்டும் என்று சிந்தித்துச் செயல்படக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களுள் ஒருவர் பேரா. இர. பிரபா.
பஷீரையும் தோப்பில் முகம்மது மீரானையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பயில வேண்டும் என்று தீராத தேடுதலும் தாகமும் கொண்டவர். இலக்கிய உலகிலும் கல்விப் புலத்திலும் தொடர்ந்து அவர் இயங்கி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
-பா. இரவிக்குமார்
Be the first to rate this book.