உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு காந்தி மேற்கொண்ட சக்தி வாய்ந்த பயணம் நவகாளி யாத்திரை. 1946 இல் ஜின்னாவின் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையால் இந்து முஸ்லிம் மக்களிடையே பெரும் இனக்கலவரம் மூண்டது. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள வங்காளப் பகுதியில் இந்துக்கள் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதுபோன்று இந்துக்கள் அதிகமாக உள்ள பீகாரில் முஸ்லிம் மக்கள் கொடுமைக்கு ஆளாயினர். வங்காளத்தில் நவகாளி என்னும் இடத்தில் சுமார் ஐந்தாயிரம் மக்களைக் காவு வாங்கிய அந்த இனக்கலவரம் பற்றி அறிந்த காந்தி, நவகாளிக்குப் பாதயாத்திரை செல்லத் தீர்மானித்தார். அவரது பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்ற சாவி அவர்கள், காந்தியுடனான தனது பயண அனுபவங்களை எடுத்துரைக்கும் நூலே இது. காந்திஜியின் நவகாளி பயணத்தோடு ஹிந்துஸ்தானி விழா, மதுரைப் பயணம் ஆகியவற்றைப் பற்றியும் இந்நூலில் கட்டுரையாக்கியுள்ளார், சாவி. நவகாளியில் நடந்த இனக்கலவரம் தீவிரம் ஆகாமல் இருந்ததற்குக் காந்தியின் நடைப் பயணமே காரணம்.
Be the first to rate this book.