நட்பு நிபந்தனைகளற்ற உறவு. உறவுகளின் உச்சமாகவும், உரிமைகளின் உச்சியாகவும் கருதப்படுகிற உன்னதமான அந்த உணர்வை சகல நோக்கிலும் ஆராய்கிற முயற்சியாக இந்த நூலை நான் எழுதத் தொடங்கினேன். இதில் எனக்கேற்பட்ட சில நேரடி அனுபவங்களையும் ஆங்காங்கே தூவியிருக்கிறேன்.
மூன்று ஆண்டுகளாக நட்பு குறித்து நான் சேகரித்த தகவல்களையும், நூல்களையும் படித்து அசைபோட்டு அவை எனக்குள் நன்றாக ஊறிய பிறகே இந்த நூலைப் படைத்துள்ளேன். முழுக்க முழுக்க நட்பைப் பற்றியே அலசும் முதல் தமிழ் நூல் இதுவாகவே இருக்க முடியும் என்று அனுமானிக்கின்றேன்.
- இறையன்பு
Be the first to rate this book.