இன்று திருவாதிரை, இன்று திருவோணம் என்றெல்லாம் ஒவ்வொருநாளும் ஒரு நட்சத்திரத்தின் பெயரால் சொல்கிறோமே! எதைக் கொண்டு அதைக் கணக்கிடுகிறோம் என்ற கேள்வியோடு தொடங்கும் இந்த நூல், இதற்கான விடை சந்திரனிடம் இருக்கிறது என சுட்டிக்காட்டுகிறது. சந்திரனைப் பற்றி நாம் அறிந்த - அறியாத கதைகளைக் கூறும் இந்த நூல் நட்சத்திரங்களின் சிறப்பு, வடிவம், வண்ணம் என பலவற்றைச் சொல்வதோடு எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்னென்ன குணமிருக்கும் அவர்கள் வாழ்க்கை எவ்விதம் அமையும் என்பதை சோதிடரீதியாகவிரிவாகக் கூறுகிறது.
இதன் ஆசிரியர் கலைமாமணி முனைவர் கே.பி.அறிவானந்தம் சமய இலக்கியச் சொற்பொழிவாளரானதால் ஒவ்வொன்றையும் மிகுந்த சுவையோடு விவரிக்கிறார். சந்திரனின் அருளைப் பெறுவதற்கும், நட்சத்திரங்களுக்குரிய அதிதேவதைகளுக்கு பரிகாரங்கள் செய்வதற்கும் ஆன வழிமுறைகள் இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.