என் கவிதை புதிதல்ல
பலமுறை பலர் வரலாறு
முழுதிலும் எழுதி முடித்தது நைஜீரியா
குடியானவளின் புகையிலைக்குள்
என் கவிதை சுருண்டிருக்கிறது
அயர்லாந்தின் உறைபனிக்குள்
சிலிர்த்திருக்கிறது
சிங்களக் கடலில் தேயிலையாய்
சிவந்திருக்கிறது பவுத்த
மரவுரியின் நிறக்கவுச்சி என் கவிதை
பாலஸ்தீனிய ஆணின் அறுபட்ட
முன்தோலின் முகமாயிருக்கிறது
எல்லாராலும் எழுதப்பட்ட என் கவிதையை
மீண்டும் மீண்டும் மீண்டும் எழுதுவேன்
நான் நீங்கள் இன்னுமதை வாசிக்கவில்லை
வாசிக்கும்வரை நானும் எனக்குப்பின்
இன்னொரு நானும் மற்றுமொரு நானும்
எழுதிக் கொண்டேயிருப்போம்.
Be the first to rate this book.