நீங்கள் தேர்ந்தெடுக்கும், யோக ஆசிரியர் அல்லது நிறுவனம், உங்களுக்குப் பரிந்துரைக்கும் பயிற்சிகள் சார்ந்து அறிவியல்பூர்வமான ஆய்வுகளை முன் வைக்கிறார்களா? அந்தப் பயிற்சிகளின் சாதக பாதகங்கள் விரிவாகச் சொல்லப்படுகின்றனவா? எந்த வகையில் இந்தப் பயிற்சி உங்கள் உடலியல் /மனம் சார்ந்த உபாதைக்கு உதவும். உடலில் எந்த மாதிரியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும், முக்கியமாக தவறாகப் பயிற்சி செய்தால் நிகழும் பக்கவிளைவுகள் யாவை ? போன்ற அனைத்தும் அறிவியல்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்திய அளவிலோ, உலக அளவிலோ, ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார்களா? அதன் எதிர்வினை என்ன? போன்ற அறிவுசார் விவாதங்கள் நிகழ்ந்திருக்கிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உலக அளவில் முக்கியமான நான்கு நிறுவனங்கள் இதை மிகச்சிறப்பாக செய்து வருவதை இணையத்தில் சற்று தேடினாலே கண்டு கொள்ள முடியும்.
Be the first to rate this book.