எவ்வளவு முயன்றாலும், அன்றாடம் நாம் செய்ய வேண்டியிருக்கும் வேலைகளின் பட்டியலின் நீளம் குறைவதற்குப் பதிலாகக் கூடிக் கொண்டேதான் போகிறது. பதிலளிக்கப்பட்டே ஆக வேண்டிய மின்னஞ்சல்களால் நிரம்பி வழிகிறது நம்முடைய மின்னஞ்சல் வருகைப் பெட்டி. நம்முடைய கணினித் திரைகளும், தொலைக்காட்சித் திரைகளும், அலைபேசித் திரைகளும் நாம் எந்த வேலையிலும் சிறிது நேரத்திற்கு மேல் கவனம் செலுத்த முடியாதபடி நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், நேரத்துடன் நாம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த இழுபறிப் போராட்டத்திற்கும் உச்சகட்ட நேர நிர்வாகப் பிரச்சனைக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான தொடர்பை நாம் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்: ஒட்டுமொத்தமாக இந்த உலகில் நாம் இருக்கப் போகின்ற, சராசரி 4,000 வாரங்கள் எனும் மிகக் குறுகிய காலத்தை நாம் எப்படி ஆகச் சிறந்த முறையில் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்விதான் அது. அந்தக் கேள்விக்கு, உத்வேகமூட்டும் விதத்திலும், நடைமுறைக்கு உகந்த விதத்திலும், சுவாரசியமான விதத்திலும் விடை காண முயற்சிக்கிறது இந்நூல். நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற, ‘எல்லாவற்றையும் செய்து முடித்தே ஆக வேண்டும்’ என்ற நவீன வறட்டுப் பிடிவாத மனப்போக்கைத் தூக்கி எறிந்துவிட்டு, ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது.
Be the first to rate this book.