இராமநாதபுரம் மன்னர் சேதுபதி அரசு ஆவணங்கள், தமிழ்நாடு அரசின் வருவாய் ஆவணங்கள், இந்திய இலங்கை அரசுகளின் ஆவணங்கள், அரசு அறிவிப்புகள் போன்ற பல்வேறு சான்றுகளோடு கச்சத்தீவு தமிழர்களின் வரலாற்றுத் தாயகப் பகுதி என்பதையும், அதனை இந்திய அரசு இலங்கைக்கு கொடுத்தது வரலாற்றுச் சான்று களுக்கும் உலக நீதிக்கும் எதிரான கொடும் செயல் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடு, விளக்கியுள்ள நூல் தான் "நமது கச்சத்தீவு!
கச்சத்தீவு பறிபோனதன் விளைவை அன்றாடம் உயிர்ப்பலி கொடுத்து தமிழினம் அனுபவித்து வருகிறது. இந்நூலில், ஐயா புலவர் இராசு ஒரு ஆய்வாளருக்கே உள்ள வரம்போடு நின்று கொண்டே, இதில் தமிழினத்திற்கு நடந்த இரண்டகத்தை சாட்சிகளையும், சான்றாவணங்களையுமே பேச வைத்து விளக்கியிருக்கிறார்.
ஆரிய வல்லாதிக்க இந்தியாவை புரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல் - "நமது கச்சத்தீவு"!
Be the first to rate this book.