எத்துறையிலும் முதன்மை பெற்ற மாநிலமாய் இந்தியாவில் இருக்கும் நாடு நம் தமிழ்நாடு. நிதியை வழங்குவதில் வஞ்சனை செய்கின்ற நிலையில் நடுவண் அரசு இருந்த போதும் நாளும் ஒவ்வொரு திட்டத்தை அறிவித்து மக்கள் நலனைப் போற்றுகின்றார். அத்துடன் மக்களும் குறிப்பாகப் பெண்களும் மாணவ மாணவிகளும் 'அப்பா' என்று அன்புடன் அழைத்து மகிழுகின்ற காட்சியினையும் காண வைக்கின்றார்.
முன்னேற்றம் காணுகின்ற திட்டங்களால் நாடு முன்னேறி வருவதனை நடுவண் அரசின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அய்க்கிய நாடுகளின் அவையே பாராட்டும் வகையில் நிதி மறுத்த நிலையிலும் மக்கள் நலம்பெறும் திட்டங்களைத் தீட்டுகின்றார். பிற மாநிலங்களில் இத்திட்டங்களை நடைமுறை படுத்தக் கூடிய அளவில் சிறப்பாக ஆட்சி யினை நடத்துகின்ற நிலையைக் காணும் போதும் அறியும் போதும் கவிதைகளை நாள்தோறும் திட்டங்களை முதல்வர் படைப்பது போல் படைத்து வந்தேன்.
Be the first to rate this book.